முன்னுரை:
உலகில் பிறந்தவர்
அனைவருக்கும் உணவு, உடை, உறையுள் மூன்றும் அவசியமானதாகும். மனிதன் தனது தேவைக்குப்
பல்வேறு பொருட்களை வாங்குகின்றான். பொருட்களை வாங்கி அனுபவிப்போரே நுகர்வோர் ஆவர்.
நுகர்வோர் பாதுகாப்பு:
அமெரிக்காவைச் சேர்ந்த இரால்ப்
நடார் என்பவர் நுகர்வோரின் நலன்களைக் காக்க இயக்கம் ஒன்றைத் துவக்கினார்.
இவ்வியக்கம் உலக நாடுகள் அனைத்திலும் இன்று செயல்பட்டு வருகிறது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்:
இந்தியாவில்
நுகர்வோருக்கு ஏற்படும் குறைகளை நீக்கவும் இழப்பினை ஈடுகட்டவும் 1986இல் நுகர்வோர்
பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. பொருட்களில் கலப்படம் செய்யும் உற்பத்தியாளர்,
வணிகர் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது.
மக்கள் கடமை:
நுகர்வோர் பொருட்களை
வாங்கும்போது ஐ.எஸ்.ஐ முத்திரை, அக்மார்க் முத்திரை உள்ள பொருட்களை வாங்கவேண்டும்.
வாங்கும் பொருளுக்கு விற்பனைச் சீட்டு பெறவேண்டும். நுகர்வோர் தாம் வாங்கிய பொருள்
தரம் குறைந்ததாக இருப்பின் நுகர்வோர் நீதி மன்றங்களை நாடி தீர்வு காணவேண்டும்.
முடிவுரை:
வணிகர்கள் பொது நலன்
கருதி நல்ல பொருட்களை விற்பனை செய்ய முன்வர வேண்டும். நுகர்வோர்களாகிய நாம்
மிகவும் கவனத்தோடு பொருட்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.