Showing posts with label ஆறாம் வகுப்பு. Show all posts
Showing posts with label ஆறாம் வகுப்பு. Show all posts

Tuesday, 29 November 2016

எங்கள் ஊர்



முன்னுரை:
            நான் பிறந்து, வாழ்ந்து வரும் ஊர் புதுச்சேரி ஆகும். இது புதுச்சேரி மாநிலத்தின் தலைநகரமாகவும் உள்ளது. சிறந்த வணிக நகரமாக விளங்கும் புதுச்சேரியின் சிறப்புகளை இக்கட்டுரை விளக்குகிறது.
ஊர் பெயர்க்காரணம்:
            அயல் நாட்டு வரலாற்று ஆசிரியர்கள்பொதுகே’, ‘பொதுகாஎனக் குறிப்பிடும் பகுதியே இன்றுபுதுச்சேரிஎனப் பெயர்பெற்றதாகக் கூறுகின்றனர்.
ஊர் எல்லைகள்:
            புதுச்சேரியின் எல்லைகளாகக் கிழக்கே வங்காள விரிகுடாக் கடலும், மேற்கிலும் வடக்கிலும் விழுப்புரம் மாவட்டமும், தெற்கே கடலூர் மாவட்டமும் அமைந்துள்ளன.
ஊர் அமைப்பு:
            புதுச்சேரி பிரெஞ்சியர் ஆட்சிக் காலத்தில் வெள்ளை நகரம், கருப்பு நகரம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. பிரெஞ்சியர் வாழ்ந்த பகுதி வெள்ளை நகரம் என்றும், தமிழர் வாழ்ந்த பகுதி கருப்பு நகரம் எனக் கூறப்பட்டது. இன்று இந்நிலை மாறிவிட்டது.புதுச்சேரியில் கிழக்கு மேற்காகவும், தெற்கு வடக்காகவும் சாலைகள் நேர்நேராக அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும்.
சிறப்பு:
            அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோயில், அருங்காட்சியகம், கடற்கரை, பாரதி பூங்கா, பாரதியார் நினைவு இல்லம், பாரதிதாசன் நினைவு இல்லம் ஆகியவை புதுச்சேரிக்குப் புகழ் சேர்ப்பவை.
முடிவுரை:
நான், எங்கள் ஊரான புதுச்சேரியைப் பற்றி எழுதியுள்ளேன். நீங்களும் உங்கள் ஊரின் சிறப்பை எழுதுங்கள்.

Friday, 30 September 2016

உடல் நலம் காப்போம்



முன்னுரை:
          கிடைத்தற்கு அரியது மனிதப்பிறவி. ‘உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்’ என்பது திருமூலரின் வாக்கு. எனவே, உடல் நலத்தைக் காக்க நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன.
உடல் தூய்மை:
          நாம் காலையும் இரவும் பல் துலக்கவேண்டும். தினமும் குளித்து, தூய ஆடை அணிவது உடலுக்கும் உள்ளத்துக்கும் நலம் தரும். வாரம் ஒரு முறை கை, கால் விரல் நகங்களை சீராக வெட்டி, அழுக்குச் சேர்வதை தவிர்க்கவேண்டும். சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் கை, வாய் ஆகியவற்றைக் கழுவ வேண்டும்.
உணவுப் பழக்கம்:
          பற்கள் பாதுகாப்பாக இருக்க குளிர்பானம், பனிக்கூழ் முதலானவற்றை உண்பதை தவிர்க்கவும். கீரை, காய்கறி, பழம் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஈ மொய்த்த, கெட்டுப்போன உணவுப் பண்டங்களை உண்ணக்கூடாது.
விளையாட்டு:
          காலையும் மாலையும் நண்பர்களோடு விளையாடுவது நம் உடலுக்கு நல்லது. நடத்தல், மிதிவண்டி ஓட்டுதல் முதலானவைச் சிறந்த உடற்பயிற்சிகள் ஆகும். நெடுநேரம் தொலைக்காட்சி பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
முடிவுரை:
          உடல் தூய்மையும், உணவுப் பழக்கமும், உடற்பயிற்சியும் முறையாய் அமைந்தால், நாம் நோயற்ற வாழ்வு வாழலாம். எனவே, நாமும் இவற்றை நம் வாழ்வில் கடைபிடிப்போம்.

Sunday, 25 September 2016

நான் விரும்பும் தேசிய தலைவர் – ஜவகர்லால் நேரு



                                                நான் விரும்பும் தேசிய தலைவர்ஜவகர்லால் நேரு

முன்னுரை:
            இந்தியா விடுதலை பெற பலத் தலைவர்கள் பாடுபட்டனர். அவர்களுள் ஒருவர் ஜவகர்லால் நேரு ஆவார். இவரே நான் விரும்பும் தேசியத் தலைவர்.
நேருவும் குழந்தைகளும்:
            நேரு, தம் நாட்டு மக்களிடம் அன்பு கொண்டிருந்தார். குழந்தைகளிடம் கொண்டிருந்த பேரன்பு அளவிட முடியாதது. இவர் குழந்தைகளிடையே இருக்கும்போது தம் கவலை அனைத்தையும் மறந்து விடுவார். அதனால், தன் பிறந்த நாளான நவம்பர் 14-ஆம் தேதியைக் குழந்தைகள் நாளாகக் கொண்டாடச் செய்தார்.
இயக்கங்களும் போராட்டங்களும்:
            நேரு, 1942-இல்வெள்ளையனே வெளியேறுஇயக்கத்தில் கலந்து கொண்டு சிரை சென்றார். 1941-இல் காந்தியடிகளின் சத்தியாகிரகப் போரில் நேரு கலந்து கொண்டார். இதனால் இவருக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.
பொதுச் சேவை:
            நேரு, தம் வாழ்நாள் முழுவதும் உலக அமைதிக்குப் பாடுபட்டார். வருங்கால இந்தியர் நல்வாழ்விற்கு வித்திட்டார். அதனால்ஆசிய ஜோதிஎன்ற அழியாப் புகழ் பெற்றார்.
முடிவுரை:
            நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் நற்பணிகள் செய்த நேருவின் பெயரும், புகழும் என்றும் நிலைத்திருக்கும். நாமும் அவர் காட்டிய வழியில் நாட்டுக்குத் தொண்டு செய்வோம்.