Showing posts with label ஆறாம் வகுப்பு தமிழ் கட்டுரை. Show all posts
Showing posts with label ஆறாம் வகுப்பு தமிழ் கட்டுரை. Show all posts

Sunday, 11 September 2016

பாரதியார்

க.எண்
நாள்                               பாரதியார்
முன்னுரை:
                             நீடு துயில் நீங்க
                             பாடி வந்த நிலா
எனப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனால் பாடப்பட்டவர் பாரதியார். அவரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
பிறப்பும் _ இளமையும்:
          பாரதியார் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் 11-12-1882 இல் பிறந்தார். இவருடைய பெற்றோர் சின்னசாமி ஐயர் _ இலக்குமி அம்மையார் ஆவர்.
          பாரதியாருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன் ஆகும். இவர் இளமையிலேயே கவிதை இயற்றும் திறமை பெற்றிருந்தமையால்பாரதிஎன்ற சிறப்புப் பெயர் பெற்றார்.
இயற்றிய நூல்கள்:
          பாரதியார் பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாப்பாப் பாட்டு, புதிய ஆத்திச்சூடி முதலிய நூல்களை இயற்றினார்.
தொண்டுகள்:
          பாரதியார் தமிழ்த் தொண்டும் சமுதாயத் தொண்டும் ஆற்றியவர். பெண்ணுரிமைக்குக் குரல் கொடுத்தவர். இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்.
முடிவுரை:
‘சிந்துக்குத் தந்தை’, ‘கவிதைக் குயில்’ எனப்   புகழப்பெற்ற     பாரதியார் 11-9-1921இல் மறைந்தார். அவர் மறைந்தாலும் அவருடைய புகழ் இன்றும் நிலைத்து நிற்கிறது.

Thursday, 30 July 2015

சொற்களை வாக்கியத்தில் அமைத்து எழுதுதல்

1. மொழி      --        இந்தியாவில் பல மொழி பேசும் மக்கள் உள்ளனர்.
2. போட்டி    --        கந்தன் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்றான்.
3. வீரம்         --        வீரபாண்டியக் கட்டபொம்மன் வீரத்துடன் ஆங்கிலேயரை
                                    எதிர்த்தான்.
4. ஓய்வின்றி  --      நாம் ஓய்வின்றி உழைத்தால் வாழ்க்கையில் முன்னேறலாம்.
5. முயற்சி        --     முருகன் முயற்சி செய்து படித்ததால் தேர்வில் வெற்றி
                                    பெற்றான்.
6. சுறுசுறுப்பு  --     நாம் அனைவரும் எறும்பைப் போலச் சுறுசுறுப்புடன்
                                    செயல்பட வேண்டும்.
7. பாம்பு        --       பாம்புகள் ஊர்வன இனத்தைச் சேர்ந்தவை.
8. முதலுதவி  --       ஆசிரியர், தலையில் அடிபட்ட வளவனுக்கு முதலுதவி
                                    செய்தார்.
9. தாலாட்டு  --       தாய், தன் குழந்தையைத் தாலாட்டுப் பாடி உறங்க வைத்தாள்.
10. கல்வி      --        அமுதன் கல்வி கற்று வாழ்க்கையில் உயர்ந்தான்.
11. மகிழ்ச்சி  --        விளையாட்டு, குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
12. நம்பிக்கை  --    பாண்டியன், தன் நண்பன் மீது நம்பிக்கை வைத்தான்.
13. விழாக்கள்  --    பொங்கல் தமிழர் கொண்டாடும் விழாக்களுள் ஒன்று.
14. பணி         --      பாரதியார் ‘இந்தியா’ என்ற இதழில் ஆசிரியராகப்
                                    பணியாற்றினார்.
15. தனிச்சிறப்பு  --            எல்லோரிடமும் இனிமையாகப் பேசுவது அழகனின்
                                    தனிச்சிறப்பு ஆகும்.