முன்னுரை:
கிடைத்தற்கு அரியது மனிதப்பிறவி.
‘உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்’ என்பது திருமூலரின் வாக்கு. எனவே, உடல்
நலத்தைக் காக்க நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன.
உடல் தூய்மை:
நாம் காலையும் இரவும் பல்
துலக்கவேண்டும். தினமும் குளித்து, தூய ஆடை அணிவது உடலுக்கும் உள்ளத்துக்கும் நலம்
தரும். வாரம் ஒரு முறை கை, கால் விரல் நகங்களை சீராக வெட்டி, அழுக்குச் சேர்வதை
தவிர்க்கவேண்டும். சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் கை, வாய் ஆகியவற்றைக் கழுவ
வேண்டும்.
உணவுப் பழக்கம்:
பற்கள் பாதுகாப்பாக இருக்க குளிர்பானம்,
பனிக்கூழ் முதலானவற்றை உண்பதை தவிர்க்கவும். கீரை, காய்கறி, பழம் போன்றவற்றை
உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஈ மொய்த்த, கெட்டுப்போன உணவுப் பண்டங்களை
உண்ணக்கூடாது.
விளையாட்டு:
காலையும் மாலையும் நண்பர்களோடு
விளையாடுவது நம் உடலுக்கு நல்லது. நடத்தல், மிதிவண்டி ஓட்டுதல் முதலானவைச் சிறந்த
உடற்பயிற்சிகள் ஆகும். நெடுநேரம் தொலைக்காட்சி பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
முடிவுரை:
உடல் தூய்மையும், உணவுப் பழக்கமும்,
உடற்பயிற்சியும் முறையாய் அமைந்தால், நாம் நோயற்ற வாழ்வு வாழலாம். எனவே, நாமும்
இவற்றை நம் வாழ்வில் கடைபிடிப்போம்.