Thursday, 30 July 2015

சொற்களை வாக்கியத்தில் அமைத்து எழுதுதல்



1. மொழி      --        இந்தியாவில் பல மொழி பேசும் மக்கள் உள்ளனர்.
2. போட்டி    --        கந்தன் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்றான்.
3. வீரம்         --        வீரபாண்டியக் கட்டபொம்மன் வீரத்துடன் ஆங்கிலேயரை
                                    எதிர்த்தான்.
4. ஓய்வின்றி  --      நாம் ஓய்வின்றி உழைத்தால் வாழ்க்கையில் முன்னேறலாம்.
5. முயற்சி        --     முருகன் முயற்சி செய்து படித்ததால் தேர்வில் வெற்றி
                                    பெற்றான்.
6. சுறுசுறுப்பு  --     நாம் அனைவரும் எறும்பைப் போலச் சுறுசுறுப்புடன்
                                    செயல்பட வேண்டும்.
7. பாம்பு        --       பாம்புகள் ஊர்வன இனத்தைச் சேர்ந்தவை.
8. முதலுதவி  --       ஆசிரியர், தலையில் அடிபட்ட வளவனுக்கு முதலுதவி
                                    செய்தார்.
9. தாலாட்டு  --       தாய், தன் குழந்தையைத் தாலாட்டுப் பாடி உறங்க வைத்தாள்.
10. கல்வி      --        அமுதன் கல்வி கற்று வாழ்க்கையில் உயர்ந்தான்.
11. மகிழ்ச்சி  --        விளையாட்டு, குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
12. நம்பிக்கை  --    பாண்டியன், தன் நண்பன் மீது நம்பிக்கை வைத்தான்.
13. விழாக்கள்  --    பொங்கல் தமிழர் கொண்டாடும் விழாக்களுள் ஒன்று.
14. பணி         --      பாரதியார் ‘இந்தியா’ என்ற இதழில் ஆசிரியராகப்
                                    பணியாற்றினார்.
15. தனிச்சிறப்பு  --            எல்லோரிடமும் இனிமையாகப் பேசுவது அழகனின்
                                    தனிச்சிறப்பு ஆகும்.

1 comment:

  1. SSHDFKEUGWAIGBKEWJGBEHJTSEGYEUFHUVLXO PCOTEKGOJEIAVODZB0ODHWJRMNAB

    ReplyDelete