Saturday, 25 January 2020

இருப்பிடச் சான்று வேண்டி வட்டாட்சியருக்கு விண்ணப்பம்


அனுப்புநர்:
            ப. குகன்
            தாழை வீதி
            முத்தியால்பேட்டை
            புதுவை 3.
பெறுநர்:
            திரு வட்டாட்சியர் அவர்கள்
            வட்டாட்சியர் அலுவலகம்
            புதுவை 1.
ஐயா,
            பொருள்:  இருப்பிடச் சான்று வேண்டி.
            வணக்கம். நான் மேலே குறிப்பிட்ட முகவரியில் பத்து ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வருகிறேன். நான் படிக்கும் பள்ளியில் என் இருப்பிடச் சான்று கேட்கின்றனர். அதனால் நான் இம்முகவரியில்தான் வசிக்கிறேன் என்பதற்கான இருப்பிடச் சான்றிதழ் வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
                                                                                    நன்றி.
இணைப்பு:
1      குடும்ப அட்டை நகல்
2      ஆதார் அட்டை நகல்                                 
                                                                        இப்படிக்கு
                                                            தங்கள் உன்மையுள்ள
                                                                        ப.குகன்
முத்தியால்பேட்டை
15.11.2019
உரைமேல் முகவரி
பெறுநர்:
            திரு வட்டாட்சியர் அவர்கள்
            வட்டாட்சியர் அலுவலகம்
            புதுவை 1.

No comments:

Post a Comment